கை அடித்தலை பற்றி உங்களுக்கு தெரியாத, ஆனால் தெரிந்து கொள்ள வேண்டிய நான்கு உண்மைகள்

காமம், புணர்ச்சி என்பது அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாத ஒன்று. ஆனால் சுய இன்பம் பெறுவது அனைத்து உயிர் வகைகளாலும் முடியாது. மனிதன், குரங்கு வகைகள், யானை, பென்குயின் மற்றும் சில உயிரினங்களால் மட்டுமே சுய இன்பம் என்னும் சிற்றின்பத்தை அடைய இயலும். 

சுய இன்பம் அநாகரிகமா?

               சுய இன்பத்தில் ஈடுபடுவது முழுவதிலும் ஆரோக்கியமான மற்றும் யதார்த்த செயலாகும். அதிகப்படியான மக்கள் அதை பற்றி பேசுவதில்லை எனினும் அவர்களும் நாட்டம் கொண்டு சுய இன்பத்தில் ஈடுபடுகிறார்கள். இதை பற்றி ஒரு பழைய நகைச்சுவை துணுக்கு ஒன்று உள்ளது. “உலகத்தில் 80 சதவிகித மக்கள் சுய இன்பத்தில் செய்கிறார்கள் மற்ற 20 சதவிகித மக்கள் செய்யவில்லை என புழுகுகிறார்கள்” அவ்வளவு தான். நகைச்சுவை ஒருபுறமிருக்க உண்மையில் வெகு சில மக்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதில்லை. இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். ஒரு ஆண் சுய இன்பம் செய்கிறான், ஒரு பெண்ணும் சுய இன்பம் செய்கிறாள், ஒரு மூன்றாம் பாலினித்தவரும் சுய இன்பம் செய்கிறார், சிறுவரில் இருந்து முதியவர் வரை அனைத்து வயது மக்களும் சுய இன்பம் செய்கிறார்கள், இவ்வளவு ஏன் ஆண் பெண் தம்பதியினர் சேர்ந்தே சுய இன்பம் செய்கின்றனர். எனவே சுய இன்பம் செய்வதில் எந்த தவறும் இல்லை.

நீங்கள் அளவுக்கதிகமாக சுய இன்பம் செய்கிறீர்களா?

 “ஐயோ நான் ஒரு நாளைக்கு இரண்டு தடவ அடிக்குறேன். எனக்கு ஏதாச்சும் பிரச்சனை வருமா? எனக்கு குழந்தை பிறக்குமா?” என மிகுதியான மக்களிடம் ஒரு விதமான பயம் உள்ளது. அதை இங்கே தெளிவு படுத்திக்கொள்ளலாம். மக்கள் பயம் கொள்வதை போல் அதிகமாக சுய இன்பம் செய்வது என்று ஒன்று இல்லை. அது மக்களின் வாழ்க்கை முறைக்கேற்ப அமையும். நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் செய்பவராக இருந்தால் அதற்கு ஏற்றார் போல் ஆரோக்கியமான உணவும், விட்டமின் மற்றும் புரத சத்துக்கள் நிறைந்த பழம், காய்கறி, சிறு தானியங்களை உட்கொள்ள வேண்டும் மற்றும் நல்ல தூக்கம். நீங்கள் ஒரு நாளைக்கு ஏதோ கடமைக்கு என்று இரு வேலை உணவு சாப்பிட்டு விட்டு மாங்கு மாங்கு இரு முறை கை அடித்தால் கண்டிப்பாக அது உங்கள் உடலுக்கு பல இன்னல்களை விளைவிக்கும்.

நீங்கள் சுய இன்பம் செய்யும் பொழுது உங்களை எவரேனும் பார்த்து விட்டார்களா?

சுய இன்பம் செய்வது ஒருவரது தனிப்பட்ட செயல் என்பதால் அதை செய்யும் பொழுது எவரேனும் பார்க்க நேர்ந்தால் அது இருவருக்கும் ஒரு இக்கட்டமான சங்கட நிலையை ஏற்படுத்தும். ஆனால் அவரும் சுய இன்பம் செய்தவராக இருக்கலாம். அதனால் உங்கள் நிலை கண்டிப்பாக அவர் உணர்ந்து கொள்வார். அதனால் நீங்கள் சுய இன்பம் அடையும் தருணத்தில் எவரேனும் குறுக்கிட்டால் நீங்கள் அதைப்பற்றி நகைச்சுவையாக பேசி இக்கட்டான தருணத்தை சற்று மாற்றி அமைக்கலாம்.

சுய இன்பம் உடலுக்கு ஆரோக்கியமா?

               சுய இன்பம் என்பது முற்றிலும் ஆரோக்கியமான செயலாகும். ஆனால் சுய இன்பத்தை பற்றி வெளியுலகத்தில் நூற்றுக்கணக்கான புரலிகள் உலா வரும். அது உங்களின் மனதை மாற்றி சுய இன்பம் என்பது தவறான செயல் சிந்திக்க வைக்கும். ஆனால் அவை வெறும் புரலிகள் மட்டுமே. உண்மை என்னவெனில் சுய இன்பம் முழுக்க முழுக்க பாதுகாப்பான ஆரோக்கியமான செயலே. அது உங்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவும், மற்ற அனைத்து உடலுறவு முறைகளை காட்டிலும் சுய இன்பம் பாதுகாப்பானதாகும். காமத்தில் உங்களுக்கு பிடித்தவைகள் பிடிக்காதவைகளை கண்டறிய சுய இன்பம் சிறந்த வழிகாட்டி. சுய இன்பம் உடனடி தூக்கத்தை வரவழைக்கும். 

Leave a Reply