மலரும் மனசே.. !!

அப்பா செத்துக் கிடந்தார். நிஜமாகவே அப்பா செத்துதான் கிடந்தார்.. !!

பத்துக்கு பத்து.. பத்துக்கு ஆறு என இரண்டு அறைகளைக் கொண்ட சாதாரண ஓட்டு வீடுதான் அது. அதுவும் வாடகை வீடு.. !!

அந்த வீட்டில்தான்.. முன்னறையில் பாயின் இந்த கோடிக்கும் அந்த கோடிக்குமாக கால்கள் இரண்டும் விரிந்து கிடக்க.. இடது கை நெஞ்சில் இருக்க .. வலது கை லேசாக மடங்கிய காலை தொட்டுக் கொண்டிருக்க.. அப்பா செத்துக் கிடந்தார்.. !!

அவர் வாய் ‘ஆ’ வெனப் பிளந்து கறை படிந்த பற்களை விகாரமாகக் காட்டிக் கொண்டிருந்தது. கண்கள் விரிந்து நிலை குத்தியிருந்தன. வாயில் ஈக்கள் மொய்த்தன. வீடு பூராவும் வாந்தி எடுத்ததின் அடையாளமாக அவர் சாப்பிட்டதெல்லாம் சாராய நாற்றத்துடன் பரவிக் கிடந்தது. அங்கேயும் ஈக்கள் கூட்டம் கூட்டமாக மொய்த்துக் கொண்டிருந்தன.. !!

கதவைத் திறந்து உள்ளே சென்றவள்.. வீட்டுக்குள் அப்பா இறந்து கிடக்கும் காட்சியைப் பார்த்து அதிர்ந்து போய்.. ‘ஹெக்’ கென நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள். அலறுவதற்காக வாயைத் திறந்தவள்.. அப்படியே புறங்கையை வாயில் திணித்து கவ்விக் கொண்டாள். கண்களிலிருந்து கடகடவென கண்ணீர் வழிந்தது. மூக்கு விகசித்து விடைத்தது. கண்கள் பயத்தில் விரிந்து உறைந்தது. சில நொடிகள் மூச்சு வரத் தவித்து பின் திணறி.. ‘ஹெக்’கென விம்மல் வெடித்தது. அப்படியே மடங்கி தரையில் சரிந்து தலையில் கை வைத்துக் கொண்டு கேவி அழுதாள் காயத்ரி.. !!

அப்பா செத்துப் போவார் என்று தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரமாக செத்துப் போவார் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. அவளுக்கிருந்த ஒரே உறவு இந்த அப்பாதான். குடிகாரர்தான் என்றாலும் அந்த உறவும் இனி இல்லை என்றானது. இனி தான் ஆனாதை என்ற உணர்வு அவள் நெஞ்சைத் தாக்க.. அவளது விம்மல் மேலும் மேலும் வெடித்து அவளை கதறி அழச் செய்தது.. !! ஆனால் அவள் அழுகைக் குரல் அந்த வீட்டை விட்டு வெளியே போகவே இல்லை..!!

அழுது தீர்த்து மெல்லத் தேறினாள். கண்களில் இருந்து வழியும் கண்ணீரை புறங்கையால் துடைத்தபடி.. கால்கள் நடுங்க அப்பாவை நெருங்கினாள். அப்பாவின் உடலில் டவுசர் மட்டுமே இருந்தது. அது கூட கசங்கிய நிலையில் அவரின் இடுப்புடன் கோபித்துக் கொண்டதைபோல அவர் இடுப்பை விட்டு கொஞ்சம் விலகியிருந்தது.

அவர் வலியால் வீடு பூராவும் உருண்டு புரண்டிக்க வேண்டும். பாய் கூட கோணல் மாணலாக சுருண்டிருந்தது. அவரைச் சுற்றிலும்.. ஏகத்துக்கும் வாந்தி. அவர் பக்கத்தில் போகவே பயமாக இருந்தது. அவரின் கண்களைப் பார்த்தால் துள்ளி தெரித்து ஓடி விட வேண்டும் போலிருந்தது. ஆனாலும் தயங்கி .. பயத்துடனே நெருங்கி அவரின் நிலை குத்தியிருந்த திறந்த விழிகளை மூடி விட்டாள். அதற்கு மேல் அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நடுங்கும் கால்களுடன் வீட்டை விட்டு வெளியேறினாள்.. !!

காலை நேரச் சூரியன் இன்னும் கோபமடையவில்லை. காயத்ரியின் வீட்டை ஒட்டி இருக்கும் சொர்ணம் அக்கா வீட்டுக்குப் போனாள். கூடத்தில் ஒரு உருவம் போர்வைக்குள் சுருண்டிருந்தது. சமையலையிலிருந்து பாத்திரம் உருளும் சத்தம் கேட்டு சமையலறைக்குச் சென்றாள்.

பச்சை நைட்டியை முழுங்கால்வரை தூக்கி இடுப்பில் சொருகியிருந்த சொர்ணம்.. அடுப்பு பக்கம் இருந்து திரும்பி இவளைப் பார்த்தாள்.
“வா புள்ள.. இப்பதான் வர்ரியா?” எனக் கேட்டு விட்டு மீண்டும் அடுப்பு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

எதுவும் பேசாமல் அவள் பக்கத்தில் போய் நின்றாள் காயத்ரி. அவள் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டிருந்தது. சொர்ணம் மறுபடியும் திரும்பி காயத்ரியைப் பார்த்து திகைத்தாள்.
“ஏய்.. என்னாச்சு புள்ள? “

வாயை திறந்து சொல்ல முடியாமல் கேவவினாள் காயத்ரி.

அவள் தோளைத் தொட்டாள் சொர்ணம்.
“உங்கப்பன் அடிச்சிட்டானா?”

மறுப்பாக தலையை ஆட்டினாள்.

“அப்றம் ஏன்டி அழுகற? நைட் சிப்டுதான போயிட்டு வர..?”

கண்ணீருடனே ஆமோதிப்பாக தலையாட்டினாள்.

“என்னாச்சு காயு.. இப்படி நீ ஒண்ணுமே சொல்லாம அழுதிட்டிருந்தா நான் என்னன்னு நெனைக்கறது? வாயை தெறந்து சொல்லிட்டு அழு..”

விம்மலை அடக்கினாள். கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தாள். சொர்ணத்தை பார்க்க முடியாமல் பல்லைக் கடித்தபடி சொன்னாள்.
“அப்பா செத்துக் கெடக்கு..”

காயத்ரி சொன்னதைக் கேட்டு ஆடிப் போனாள் சொர்ணம். இவ்வளவு நிதானமாக அந்த வார்த்தையை அவள் எதிர் பார்க்கவில்லை என்பதை அவளது அதிர்ந்த முகமே சொன்னது.
“ஆஆ.. என்னடி சொல்ற?” பதறி காயத்ரியின் இரு தோள்களையும் பிடித்து உலுக்கினாள்.

கண்ணீர் வழிய.. விக்கலோடு சொன்னாள் காயத்ரி.
“நா.. நா.. நைட் சிப்ட் முடிச்சிட்டு இப்பதான்கா வந்தேன்.. பாத்தா வீடு பூரா வாந்தி… கண்ணு தொறந்து… ராத்திரியே செத்துருக்கு…” மேலே பேச முடியாமல் கேவினாள்.

“ஐயோ தெய்வமே..” அவளை விட்டு முன்னால் ஓடினாள் சொர்ணம் .போர்வைக்குள் சுருண்டிருந்த தன் கணவனை எட்டி உதைத்தாள்.
“அட பீடை புடிச்ச மனசா.. எந்தரி மேல.. பக்கத்தூட்ல ஒரு மனுசன் செத்து பொணமா கெடக்கான்.. உனக்கு தூக்கம் கேக்குதா..”

அவளின் அலறல் பொலம்பலைக் கேட்டபடி கண் விழித்த அவள் கணவன் பதறினான்.
“என்னடி சொல்ற சனியனே..?”
“ராமசாமி அண்ணன் செத்து பொணமா கெடக்கறானாம். போய் என்னன்னு பாரு.. நைட்டே செத்துருக்கனும்னு காயத்ரி வந்து சொல்றா.. அந்த புள்ள என்ன பண்றதுனு தெரியாம பித்து புடிச்சு போய் நிக்குது.. ஓடு ஓடு..”

அவிழ்ந்த வேட்டியை சுருட்டிப் பிடித்தபடி பக்கத்து வீட்டுக்கு ஓடினான் சொர்ணத்தின் கணவன். அவன் பின்னால் சொர்ணமும் புலம்பியபடியே ஓடினாள்.. !!

காயத்ரி சமையலறையை விட்டு வெளியே போகவே இல்லை. அங்கேயே நின்று விட்டாள். சில நொடிகளில் சொர்ணத்தின் ஒப்பாரி பலமாக கேட்டது. மடமடவென தெருவே கூடிவிட.. சமையலறையில் தனியே நின்று கலங்கிக் கொண்டிருந்த காயத்ரியை சொர்ணம் மீண்டும் வந்து அழுதபடியே இழுத்துப் போனாள்.

காயத்ரியின் வீட்டின் முன்பும்.. வீட்டுக்கு உள்ளேயும் தெரு மொத்தமும் கூடியிருந்தது. சொர்ணம் மீண்டும் தன் ஓலமான அழுகையைத் தொடர.. காயத்ரியும் தன்னிலை மீறி அழுதாள்.. !!

ராமசாமி என்கிற காயத்ரியின் அப்பா இறந்து போனது அந்த தெரு முழுக்க பரவி காலை நேரத்தில் ஒரு பெரும் கூட்டத்தையே சேர்த்தது. ஆனால் ஒரு மணி நேர இடைவெளிக்குப் பிறகு கூட்டம் கூடியதைப் போலவே குறையவும் தொடங்கியது.

அதன்பின் காரியங்கள் விரைவாக நடக்கத் தொடங்கின. காயத்ரியின் உறுவுகளில் அவ்வளவு நெருக்கமானவர்கள் அல்லது ஆதரவானவர்கள் என்று சொல்லிக் கொள்ளும்படியாக எவரும் இல்லை. இருக்கும் ஒரு சில தூரத்து உறவுகளுக்கு மட்டும் தகவல் சொல்லப் பட்டது. அவள் அப்பா குடித்துத்தான் செத்துப் போனார் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டதால் அவரின் ஈமக் காரியங்கள் துவங்கின.. !!

காயத்ரியின் அம்மா இறந்து போன நாளில் இருந்து அப்பா இப்படித்தான் ஏராளமான குடி. காயத்ரி பள்ளிப் படிப்பை பத்தாவதுடனே முடித்துக் கொண்டு வேலைக்குச் செல்ல தொடங்கியிருந்தாள். அவள் மாதம் முழுவதும் சம்பாதிக்கும் பணத்தின் பெரும் பகுதியை அவர் பிடுங்கி குடித்து விடுவார்.. !!

மகள் என்று கூட பார்க்காமல் கெட்ட கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசுவார். அவர் கேட்டு பணம் கொடுக்காவிட்டால் கை நீட்டவும் செய்வார். அவள் பட்டினியாக கிடந்தாலும் அவர் அதை கண்டு கொள்ள மாட்டார். ஆனால் அவர் எப்போதுமே பட்டினியாக இருக்க மாட்டார். தன் வீட்டில் உணவு இல்லாவிட்டாலும் சொர்ணத்தின் வீட்டில் இருந்து அவருக்கு உணவு வந்து விடும்.

தன் அப்பாவை சொர்ணம் அண்ணா அண்ணா என்றுதான் அழைப்பாள். காயத்ரி நைட் சிப்ட் முடிந்து வரும் பெரும்பாலான நாட்களில் காலையில் அப்பாவின் பாயில் வாடிய பூக்கள் சிதறிக் கிடக்கும். வீட்டுக்குள் ஒரு மாதிரியான கவிச்சை நாத்தமடிக்கும். அது எல்லாம் சொர்ணத்தால்தான் என்பது காயத்ரிக்கு தெரியும். ஆனால் ஒரு நாளும் அப்படி ஒரு சம்பவத்தை அவள் நேரில் பார்த்ததில்லை.. !!

அவளைப் பொறுத்தவரை அப்பா மோசமானவர்தான் என்றாலும் அப்பா என்கிற ஒரு உறவு இருப்பதே ஆறுதலாக இருந்தது. ஆனால் இப்போது அந்த ஒரு உறவும் தன்னை விட்டு போய் விட்ட நிலையில் தான் ஒரு அனாதை என்கிற உணர்வுக்கு ஆளானாள்.. !!

கெட்டவராக இருந்தாலும் இறக்கும் முன் அப்பா செய்த ஒரே ஒரு நல்ல காரியம்.. காயத்ரிக்கு வரன் பார்த்து கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்திருந்ததுதான்.. !!

தகவல் அறிந்து.. அவளது வருங்கால கணவனின் குடும்பமும் அப்பாவின் இறப்புக்கு வந்தது.. அவளுக்கு ஒரு வகையில் ஆறுதலாக இருந்தது.. !!

காயத்ரிக்கு இப்போது இருபது வயதாகிறது. அவள் படித்தது பத்தாவதுவரைதான். அந்த நேரத்தில்தான் அம்மா கேன்சரில் பாதிக்கப் பட்டு இறந்தாள். அம்மா இறந்த பின் அவள் படிப்பு தடை பட்டது. பத்தாவதை மட்டும் முடித்துக் கொண்டு வேலைக்குச் செல்லத் தொடங்கி விட்டாள்.

காயத்ரி.. மா நிறமாக இருப்பாள். கொஞ்சம் நீள் வட்ட முகம். சிறிய கண்கள். சற்றே நீண்ட சாயல் காட்டும் முகம். அழகான.. பருவப் பெண்ணுக்கே உரிய கவர்ச்சியுடன் மிளிரும் உதடுகள். மற்றபடி சராசரி உயரம். சராசரி ஃபிகர். உடலமைப்பும் சராசரிதான். சின்ன முலைகள். ஒட்டிய வயிறு. அளவான புட்டங்கள்.

அம்மா இறந்து போன துயரம். அப்பா குடிகாரராகி விட்ட துயரம்.. இதெல்லாம் சேர்த்து அவளை எப்போதும் ஒரு சோகமான மனநிலை கொண்ட பெண்ணாகவே மாற்றி விட்டது. அவள் சிரித்து பேசி ஜாலியாக இருப்பதென்பது அபூர்வமான சில நேரத்தில் மட்டும்தான். அதனாலேயே.. அவளுக்கு காதல் மீது நாட்டம் உண்டாகவில்லை. அவள் எண்ணமெல்லாம் நேர்மையாக இருந்து தனக்கான ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதாகத்தான் இருந்தது.

இந்த நிலையில்தான்.. தெரிந்தவர்கள் மூலமாக அவளைப் பெண் கேட்டு வந்து முடிவு செய்திருந்தார்கள். அவளிடம் பெரிய அளவில் பணம்.. நகை எதுவும் இல்லை என்பது தெரிந்தும்.. அவளை திருமணம் செய்து கொள்ள பையன் வீட்டினர் சம்மதித்திருந்தனர்.

You may also like...

Leave a Reply