தாலி மட்டும் தான் கட்டினேன் – Ep5

இங்கே ராம் சூப்பர் மார்க்கெட்டில் எந்த பொருளையும் வாங்காமல் சுத்தி முத்தி பார்த்துக் கொண்டிருக்க.. அவன் பின்னாலிருந்து ஒரு கை அவன் முதுகை இருமுறை தட்டி அழைத்தது..

மறுநாள் மதியம் 1 மணி
இடம்: பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி

ப்ரீத்தி வாட்ச் ஸ்டோரிலிருந்து கலை வெளியே வந்து கொண்டிருந்தாள்.. வேகமாக நடை போட்டு கடை வாசலை கடந்து வந்து கொண்டிருந்தவள் கடைக்கு 5 அடி தூரத்தில் நின்று கொண்டிருந்த கிஷோரை பார்த்து அப்டியே நின்றாள்..

“என்ன இவன் நேத்து வாட்ச் ரிப்பேர் பண்ண வந்தவன் ஆச்சே.. இப்போ எதுக்கு இங்க நின்னுட்டு இருக்குறான்.. ஒரு வேல என்னை பாக்க தான் வந்துருக்கானோ.. நேத்தே அப்படி சைட் அடிச்சான்.. இப்போ அடுத்த லெவலுக்கு மூவ் பண்ணாலும் ன்னு ட்ரை பன்றானோ? இல்ல எதார்த்தமா இங்க நிக்கிறவனை நான் தான் ஓவரா இமாஜின் பண்ணிக்கிறேனா? எதுக்கு இதெல்லாம் கண்டுக்காம போறது பெட்டர்” என நினைத்து கொண்டு அவனை கடந்து சென்றாள்..

கிஷோர்: ஹே கலை..

அங்கேயே நின்று அவனை பார்த்து திரும்பியவள் தன் தலையை 25 டிகிரி வலது பக்கமாக சாய்த்து இரண்டு புருவங்களையும் ஒரு சேர சுருக்கி அவனை ஆச்சரியமாக பார்த்து “நீங்க??” என்று இழுத்தாள்..

கிஷோர்: என்னங்க அதுக்குள்ள மறந்துட்டீங்களா.. நான் கிஷோர், நேத்து வாட்ச் ரிப்பேர் பண்ண வந்தேன். ஆஹ்ன் Google Pay ல கூட pay பண்ணேன் ல..

கலை: ம்ம்ம்.. சரி.. மறுபடியும் வாட்ச் ல ஏதாச்சும் ரிப்பேர் ஆ.. நான் லஞ்ச் பிரேக் போறேங்க.. உள்ள ஆளு இருக்காங்க. போய் பாருங்க.. bye.

கிஷோர்: கலை! கலை! ஒரு நிமிஷம் நில்லுங்க.. உங்க கிட்ட ஒன்னு!!

இல்ல உங்க கிட்ட கொஞ்சம்

கலை: என்கிட்ட என்ன.. சரி சொல்லுங்க நான் போகணும்..

கிஷோர்: இல்ல அது வந்து.

அவனை பார்த்து முறைத்தவள் “ஹெலோ என்ன வேணும் உங்களுக்கு.. ப்ரோபோசல் பண்ண வர்றிங்களா.. நேத்து கொஞ்சம் சிரிச்சு பேசுனா அட்வான்டேஜ் எடுக்கிறிங்களா”

கிஷோர்: ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்லங்க.. அது அது.. (என்ன சொல்ல என தெரியாமல் முழித்து கொண்டிருந்தான்.. சட்டென) எங்கம்மா உங்க கிட்டயே கேக்க சொன்னாங்க .. அதான்..

“ஹய்யோ என்ன அம்மா ட்ட பேசுனேன் ன்னு சொல்றான்.. இந்த காலத்துல ஒரு தடவ பாத்த பொண்ண அம்மா கிட்ட பேசுற பசங்க இருக்காங்களா.. ஐயோ என்ன இவன் இப்படிருக்கான்.. சரி என்னன்னு அவன்கிட்டயே கேட்கலாம் ன்னு” என்று நினைத்தவள் “என்னது அம்மா.. என்ன சொல்றிங்க நீங்க.. எனக்கு ஒண்ணுமே புரியல.. உங்களுக்கு என்ன வேணும் இப்போ”

கிஷோர்: ப்ளீஸ் ங்க கோவமா கேக்காதீங்க.. எனக்கு நாக்கு ரொம்ப உளறுது..

கலை: (மூச்சை மெதுவாக ஆழமாக உள்ளிழுத்து மெதுவாக வெளியே விட்டுவிட்டு) சரி (1 வினாடி இடைவெளி) சரி.. பொறுமையா கேக்குறேன்.. சொல்லுங்க.. என்ன வேணும்..

கிஷோர்: நானும் பொறுமையா சொல்றேன்ங்க.. உக்காந்து பேசலாமா?

கலை: Asia Seven Express

கிஷோர்: புரியல என்னது அது?

கலை: இந்த மால் ல first floor ல இருக்குற food court ல restaurant பேரு அது..

கிஷோர்: சரிங்க அது ஏன் சொல்றிங்க (பேக்கு போல புரியாம மண்டைய சொரிந்து கொண்டே கேட்டான்)

கலை: பிரியாணி தந்தூரி சிக்கன் காம்போ

கிஷோர்: என்னங்க சொல்றிங்க ஒண்ணுமே புரியல எனக்கு

கலை: மாங்கா!! மாங்கா!! பேசணும் ன்னு சொன்னில்ல சாப்டுட்டே பேசலாம்.. நீ தான் வாங்கி தர்ற..

கிஷோர்: (வாயெல்லாம் பல்லாக) இல்லங்க நான் பேசலாமா ன்னு கேட்டதுக்கு எதுவும் சொல்லாம ஹோட்டல் பேரு லாம் சொன்னதுனால சரியா புரியல..

கலை: அதுக்கு தான் உன்னை மாங்கா ன்னு சொன்னேன்.. சரி என்ன கிளம்பாம அப்டியே நிக்குற.. போ

கிஷோர்: அது எங்க இருக்குன்னு எனக்கு தெரியாதே.. எப்படிங்க போகணும்..

கலை: (இவன் கோமாளி தனத்தை பார்த்து சிரித்துக்கொண்டே) சரி.. நான் முன்னாடி போறேன்.. நீ என் விரலை பிடிச்சுட்டே வரியா..

கிஷோர்: ரொம்ப கலாய்க்காதீங்க!! ரெண்டு பெரும் ஒண்ணாவே போலாம்..

ஐந்து நிமிடத்திற்கு பிறகு அது இது என பல வகையான உணவுகளை ஆர்டர் பண்ணிவிட்டு டேபிளில் வந்து இருவரும் எதிர் எதிரே அமர்ந்தனர்..

கிஷோர் எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் அவளை பார்க்க, அவள் பார்த்ததும் சட்டென கண்களை உருட்டி சுத்தி முத்தி பார்க்க.. இரண்டு நிமிடங்கள் இப்டியே கடந்தது..

கலை: (என்ன இவன் எதுவும் பேச மாட்டிங்கிறான் என நினைத்தவள்) ஆர்டர் பண்ணது வர்றதுக்கு எப்படியும் கொறஞ்சது இருபது நிமிஷம் ஆகும்.. என உரையாடலை ஆரம்பித்து வைத்தாள்..

கிஷோர்: ஓ!! அப்படியா என்று சொல்லிவிட்டு மறுபடியும் கண்களை உருட்டி சுத்தி முத்தி பார்த்து கொண்டிருந்தான்..

மிகவும் கடுப்பான கலை “என்ன நொப்படியா!! பேசணும் ன்னு பேசாம அங்கேயும் இங்கேயும் பாத்துட்டே இருக்கீங்க.. இன்னைக்குள்ள என்னன்னு சொல்லுவிங்களா?”

கிஷோர்: எனக்கு உங்களை பிடிச்சுருக்கு ரொம்ப (சட்டென போட்டு உடைத்தான்)

இதை இவனிடம் எதிர் பார்த்து தான் கலை இருந்தாள்.. ஆனால் இவ்வளவு சீக்கிரம் சொல்லுவான் என அவள் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை.. அதனாலேயே என்ன சொல்வதென்ன தெரியாமல் அமைதியாக இருந்தாள்..

கிஷோர்: கலை ஏன் அமைதியா இருக்கீங்க எதுனாலும் கோவ படாம பொறுமையா சொல்லுங்க..

கலை: இல்ல உங்களுக்கு இந்த சைட் அடிக்குறது, பின்னாடி பாலோவ் பண்றது, பேஷ்புக் ல பிரண்ட் ரெக்கோயிஸ்ட் கொடுக்குறது, அப்புறம் மாசக்கணக்கா சேட் பண்ணி நம்பர் வாங்கி, மணிக்கணக்கா போன் பேசி, கிப்ட் வாங்கி கொடுத்து அதுக்கு அப்புறம் தான் பிடிச்சுருக்கு சொல்றது லாம் தெரியாதோ.

கிஷோர்: அதெல்லாம் எதுக்குங்க.. எனக்கு அதுலாம் தெரியாதுங்க

கிஷோரின் அப்பாவித்தனமான பேச்சு ஏதோ ஒரு வகையில் அவளை அவனிடம் ஈர்த்தது..

கலை: என்னமோ உங்க அம்மா சொன்னிங்க.. என்னது

கிஷோர்: இல்ல நீங்க ஏற்கனவே ஏதோ ஒரு பையனை லவ் பண்றீங்க ன்னு எங்கம்மா ட்ட சொன்னேன்.. அது தான் அது உண்மையா இல்லையா ன்னு எங்கம்மா உங்க கிட்டயே கேக்க சொன்னாங்க..

கோபம் ஆச்சரியம் என இரண்டு உணர்ச்சிகளும் ஒரே நேரத்தில் அவளை தாக்க அவளது இரண்டு கண் உருண்டைகளும் தானாக பெரியதாக “நான் லவ் பண்ணது எப்படி இவனுக்கு தெரியும்” என நினைத்தவள் “நான் லவ் பன்றேன்னு உனக்கு யாரு சொன்னது?” என அவனிடம் கேட்டாள் .

கிஷோர்: ராகுல் சொன்னான்.. நீங்க நிஜமாவே லவ் பண்றிங்களா (எச்சியை முழுங்கி கொண்டே கேட்டான்)

கலை: (அவன் ராகுல் என்று சொன்னதும் நமது கதையின் வில்லன் ராகுல் தான் மனதில் தோன்ற இருந்தாலும் கிஷோரிடம் உறுதி செய்ய விரும்பி) ராகுல் ஆ!! எந்த ராகுல்

கிஷோர்: இல்ல அவங்க அம்மாவும் உங்க அம்மாவும் ஸ்கூல் மேட்ஸ்.. அவனும் நானும் ஒண்ணா ஒர்க் பண்றோம் அவன் தான் சொன்னான், நீங்க ஒரு வருசமா ஒரு பையனை லவ் பண்றீங்க ன்னு.. நேத்து கூட அவன் இங்க வந்து இருந்தான் அப்போ தான் சொன்னான்.. நான் ரிப்பேர் பண்ண வாட்ச் கூட அவனோடது தான்..

அவளுடைய முகம் அப்டியே கோபமாக மாற.. “ஓஹோ!! அந்த மிஸ்டர் கோடீஸ்வரர் ராகுல் ஆ!! அந்த வாட்ச் அவனோடது தான் ன்னு தெரிஞ்சு இருந்திருந்தா நான் கண்டிப்பா ரிப்பேர் பண்ணிருக்கவே மாட்டேன்.. பணக்கார திமிரு பிடிச்சவன்.. அவன் என்ன சொன்னாலும் நம்பிடுவியா நீ” என பொரிந்து தள்ளினாள்..

அவள் பேசிய அத்தனை பேச்சுக்களில் அவன் என்ன சொன்னாலும் நம்பிடுவியா நீ………. அவன் என்ன சொன்னாலும் நம்பிடுவியா நீ…….. என்ற ஒரு கேள்வி மட்டும் அவன் காதுகளில் ரீங்காரமிட அவன் முகத்தில் புன்னகை தானாக மலர்ந்தது..

Read More: ஆள்மாறாட்ட கதை | 01

கிஷோர்: அப்போ நீங்க யாரையும் லவ் பண்ணல தான..

கலை: இல்ல.. லவ் பண்ணுனேன்.. ஆனா இப்போ இல்ல.. இரண்டு மாசத்துக்கு முன்னாடி பிரேக் அப் ஆகிட்டோம்..

Leave a Reply