சாது மிரண்டால் வீடும் கொள்ளாது – 02


அவள் வேதனையான ஒரு புன்னகையை மட்டும் காட்டினாள்! பின்பு சொன்னாள், மேரேஜ் முன்னாடி வேலைக்கு போயிட்டுதான் இருந்தேன். அப்புறம் அவர் வேணான்னுட்டாரு. இப்ப 3 வருஷம் கேப் வந்திருச்சி. இனிமே ட்ரை பண்ணாலும், கிடைக்கிறது கஷ்டம்.


அப்ப, உங்களுக்குப் போக சம்மதம் அப்படித்தானே?
இப்பொழுது மைதிலிக்கு கொஞ்சம் ஆர்வம் வந்தது. என்னால் முடியுமா? கிடைக்குமா?


அதெல்லாம் கிடைக்கும். கண்டவிங்க திறமை இல்லாமியே பெரிய பொசிஷன்ல இருக்காங்க. உங்களுக்கென்ன?


ஓ… ப்ளீஸ், உங்களால் முடிஞ்ச ஹெல்ப் பண்றீங்களா?
கண்டிப்பா, அதுக்கு முன்னாடி, நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும். அதுக்கு, இது சரியான இடம் கிடையாது. உங்க ரெஸ்யூம் எடுத்துகிட்டு என் ஆஃபிஸ்க்கு வாங்க. என்னால முடிஞ்ச ஹெல்ப் கண்டிப்பா செய்யுறேன். இந்தாங்க என் விசிடிங் கார்டு கொடுத்து மறக்காமல் அவள் நம்பரையும் வாங்கிக் கொண்டேன்.


ரெஸ்யூம் கூட என்கிட்ட இல்லை. அப்டேட் பண்ணிட்டு உங்களை மீட் பண்றேன். தாங்க்யு சோ மச்.
இட்ஸ் ஓகே. பை!
நேராக ப்ரேமிடம் சென்றவன், ஏன் ப்ரேம், உங்க வைஃப் பி ஈ படிச்சிருக்காங்க. ஜாப்க்கு போலியா?
அவனோ, ஆமா, மொக்கைக் காலேஜ்ல படிச்சா. அதுக்கு ஜாப் வேற! நீங்க வேற ராஜா!
நீங்களும் பீ ஈ தானே படிச்சீங்க? எனக்கு டவுட்டா இருக்கே?
ஏன் அதிலென்ன டவுட்டு?
பி ஈ படிச்சவிங்க, பிட்ஸ் பிலானியை மொக்கை காலேஜ்னு சொல்றீங்க?
சட்டென்று சுதாரித்தவன், அப்டி இல்லைங்க. அவளுக்கு வேலைக்கு போறதுக்கெல்லாம் பிடிக்காது. கொஞ்சம் lazy அவ!
எனக்குக் கடுப்பாக இருந்தது. சட்டென்று மைதிலியைப் பார்த்து, ஏங்க உங்க ஹஸ்பண்டுக்கு கூட நீங்க வேலைக்குப் போகனும்னுதான் ஆசை போல. நீங்க இப்டி லேசியா இல்லாம, தொடர்ந்து முயற்ச்சி பண்ணி வேலைக்குப் போங்க. பாவம், அவரு, நீங்க பிட்ஸ்ல படிச்சிட்டு சும்மா இருக்கீங்களேன்னு எவ்ளோ ஃபீல் பண்றாரு! இல்லை ப்ரேம்? என் வார்த்தை ஒன்று சொன்னாலும், கண்கள் வேறு அர்த்தத்தை அவளுக்குச் சொல்லியது.


கரெக்ட் ராஜா. நானும், எத்தனையோ தடவை அவகிட்ட சொல்லிட்டேன். கேட்டாத்தானே!


இல்லீங்க, இனிமே அப்பிடி இருக்க மாட்டேன். உங்களுக்கு நான் வேலைக்குப் போறதுதான் புடிக்கும்னா, நான் இனிமே வேலைக்கு ட்ரை பண்றேன்!
வெரி குட். அப்ப இனிமே வேலைக்கு ட்ரை பண்ணுங்க. ஏதாவது ஹெல்ப் வேணும்னா கூட என் கிட்டயோ, ப்ரியாகிட்டயோ கேளுங்க! சரி, அப்ப நாங்க கிளம்பறோம் என்று நாங்கள் கிளம்பினோம்.

போகும் போதே, ப்ரியாவிடம் கடுமையாகச் சொல்லிவிட்டேன், இனி ப்ரேம் வீட்டுக்கு போகக் கூடாது ப்ரியா. உனக்கு என்ன மைதிலி மேல் அப்படி ஒரு கோவம்? அவளை இன்சல்ட் பண்ணிகிட்டே இருக்கிற? நான் சொன்னாலும் கேக்குறதில்லை. இனி நீயும் போகக் கூடாது. என்னையும் கூப்பிடாத. இதுக்கு மேலியும் இப்பிடி நடந்துது, அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்.

அதற்க்கப்புறம், ப்ரேம் வீட்டுக்கு நாங்கள் போகவே யில்லை. ஆனால், ப்ரியா, ப்ரேமை தொடந்து அவள் அலுவலகத்தில் பார்க்கிறாள். மைதிலி, 3 வாரம் கழித்து, என் அலுவலகத்தில் என்னை வந்து பார்த்தாள். வீட்டில் இருந்ததற்க்கு இன்று நன்றாக இருந்தாள்!

அவளைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். இயல்பில், அவள் மிக புத்திசாலி. வேலையில் கொஞ்சம் டச் விட்டுப் போயிருந்தாலும், அவளால் எளிதில் சமாளிக்க முடியும் என்று தோன்றியது. ஆனால் என்னை வருத்திய விஷயம், அவளிடம் நிறைய தாழ்வு மனப்பான்மை வந்திருந்தது. தன்னால் முடியுமா என்று சின்ன விஷயத்திற்கு கூட நிறைய யோசித்தாள்.

அவளிடமே சொல்லி விட்டேன். மைதிலி, உங்களால கண்டிப்பா முடியும். ஒரு வாரம் ப்ரிப்பேர் பண்ணா, உங்களுக்கு ஈசியா வேலை கிடைக்கலாம். ஆனா, இந்த இன்ஃபீரியாட்டி காம்ப்ளெக்சை வெச்சுகிட்டு கார்ப்பரேட் உலகத்துல ஜெயிக்க முடியாது. அதுனால, நீங்க, நான் சொல்ற கோர்ஸ் 4 மாசம் போங்க. உங்களை இம்ப்ரூவ் பண்ணிக்கோங்க. வேலைக்கும் நல்லா ப்ரிப்பேர் பண்ணுங்க. அப்புறமா வேலைக்கு ட்ரை பண்ணுங்க என்றேன். அவளுக்கும் அது சரியென்று பட்டது.
அவள் கோர்ஸ் போக ஆரம்பித்தாள். நாங்கள் அவ்வப்போது சந்தித்துக் கொண்டோம். அவள் கொஞ்சம் கொஞ்சமாக என்னிடம் அவளைப் பற்றி சொன்னாள். சிறு வயதிலேயே அவள் அம்மாவை இழந்தது, அவங்க அப்பா அவளைப் பாசமாக வளர்த்தது, அவள் படிப்பில் கெட்டியாக இருந்தது, ஹேண்ட் ஒர்க்கில் அவளுடைய ஆர்வம், புக்ஸ் படிக்கிறது என்று என்னிடம் மனம் திறக்க ஆரம்பித்திருந்தாள்.
மறந்தும் நான், என் மனைவியைப் பற்றியோ, அவள், ப்ரேமைப் பற்றியோ பேசிக் கொண்டதேயில்லை. எங்களுக்குள் புரிதல் வளர்ந்தது! அதே சமயம், எங்களது எல்லை எங்களுக்குப் புரிந்திருந்தது. எந்தத் தவறான எண்ணமும் எங்களுக்குள் வந்ததில்லை.
அவளுக்கு என் ஆளுமை மேல் ஈர்ப்பு! எனக்கு, அவள் மென்மையான் மனதின் மேல் ஈர்ப்பு. அந்த ஈர்ப்பு, சுத்தமான அன்பினை, தள்ளி நின்று பரிமாறிக் கொள்ள வைத்தது.
இடையிடையே, அவ்வப்போது ப்ரியாவை அவள் ஆஃபிசில் கூப்பிடும் போது ப்ரைமை சந்திப்பேன். அவர்களுக்குள் இன்னும் நெருக்கம் கூடியிருந்தது. மைதிலியும் வேலைக்கு ட்ரை பண்ணுவது, கோர்ஸ் போவது பற்றி ப்ரேமிடம் சொல்லியிருந்தாள். அவனோ, இவ்ளோ கேப் விட்டதுக்கபுக்கப்புறம் எங்க கிடைக்கப் போவுது என்று நக்கல் அடித்திருந்தாலும், அவளது செயல்களில் தலையிடவில்லை.

கோர்ஸ் முடிந்து அன்று மீண்டும் சந்தித்தோம். 5 மாதங்களில், அவளுடைய தன்னம்பிக்கையில், அறிவில் நல்ல மாற்றம் இருந்தது. அந்த மாற்றம் அவளை இன்னும் அழகாக் காட்டியது! எங்களுடைய நட்பு இன்னும் கூடியிருந்தது.

[Image: un_samayal_arayil_movie_stills_prakash_r...7d7c15.jpg]

ம்ம், நீங்க சொன்ன மாதிரியே கோர்ஸ் முடிச்சிட்டேன். என்னையும் கொஞ்சம் அப்டேட் பண்ணிகிட்டேன். இன்னும் வேற ஏதாவது பாக்கியிருக்கா? எங்கள் நட்பின் உரிமையில் அவளும் விளையாட்டாகக் கேட்டாள்.

என்ன மேடம் குஷியா இருக்கீங்க? நீ ஒழுங்கா கோர்ஸ் போனீயான்னு எனக்கு எப்புடி தெரியும்? அதுனால, நான் கேக்குற கேள்விகளுக்கு கரெக்ட்டா பதில் சொல்லிட்டீங்ன்னா வேலைக்கு ட்ரை பண்றதைப் பத்தி சொல்றேன். (இடைப்பட்ட காலத்தில் அவளை வா போ என்று சொல்லும் அளவுக்கு நெருக்கமாயிருந்தோம்)
கோபமாய் முறைத்தவள், பின் சிரித்து விட்டாள்! பின் சொன்னாள். சரி கேளுங்க!


நல்லா யோசிச்சிக்க! சரியா பதில் வராட்டி பனிஷ்மெண்ட் நிச்சயம், இன்னும் நாலைஞ்சு மாசத்துக்கு திரும்ப வேலைக்கு ட்ரை பண்ண முடியாது. ஓகே வா?
ம்ம். ஓகே, கேளுங்க. என் மேல எனக்கு நம்பிக்கையிருக்கு! நான் எதிர்பார்த்த தன்னம்பிக்கை அவள் வார்த்தைகளில் தெரிந்தது.
—— சிஸ்டம்ஸ் கம்பெனி தெரியுமா?
ஓ தெரியுமே!
என்ன தெரியும்?
சொன்னாள்!
அந்தக் கம்பெனில, இதே டெக் பார்க் ப்ராஞ்சுல, ப்ராகிராமிங் அனலிஸ்ட் ஜாப் கிடைச்சு, ஒரு மாசத்துல சேரச் சொன்னா, ஜாயின் பண்ணுவியா?
நான் சொல்வது முதலில் புரியாமல் முழித்தவள், புரிந்தவுடன் கண்ணை விரித்தாள்! வாட்? நீங்க என்னச் சொல்றீங்க? விளையாடலைதானே?
பதில் சொல்லுங்க மேடம். நான் சொல்லியிருக்கேன், பதில் சரியா இல்லாட்டி, என்ன நடக்கும்னு என்று சிரித்தவன், உண்மையைத்தான் சொல்றேன். உனக்கு வேலை ரெடி. என் ஃப்ரண்டுகிட்ட ஏற்கனவே சொல்லியிருந்தேன். வேலைல்லாம் எப்பியோ ரெடி. நீ கோர்ஸ் முடிக்கத்தான் வெயிட்டிங். என் கம்பெனியிலியே உனக்கு வேலை ஏற்பாடு பண்ணியிருந்திருப்பேன். ஆனா, நீ என்னை டிபண்ட் பண்ணி இருக்கக் கூடாதுன்னுதான் இந்த ஏற்பாடு!
மிகவும் சந்தோஷமானவள், திடீரெனக் கேட்டாள். உங்களுக்கு அவ்ளோ இன்ஃப்ளூயன்ஸ் இருக்குன்னா, முதல்லியே வேலை வாங்கிக் கொடுத்திருக்கலாம்ல? எதுக்கு என்னை 5 மாசத்துக்கும் மேல இழுத்தீங்க?
என்ன கோவமா? இன்னும் தாங்க்ஸ் கூட சொல்லலை. ஆனா கோவம் மட்டும் வருது? நான் கிண்டல் பண்ணினாலும், சிரித்துக் கொண்டுதான் கேட்டேன்.
அவளுக்கும் அது புரிந்திருந்தது. நீங்க காரணமில்லாம அப்பிடி பண்ணமாட்டீங்கன்னு தெரியும். அது என்ன காரணம்னு தெரிஞ்சிக்கதான் கேட்டேன்.


அப்பியே கிடைச்சிருந்தா, நீ இப்ப இருக்கிற அதே கான்ஃபிடண்ட்டோட ஃபேஸ் பண்ணியிருந்திருப்பியா? அதுனாலத்தான், இப்பிடி.


நான் சொன்னது உண்மைதான் என்று புன்னகை செய்தவள், கொஞ்ச நேரத்தில் முகம் மாறினாள்!


இன்னும் என்ன குழப்பம் மைதிலி?


இல்ல, வந்து… ப்ரேம் இதுக்கு ஒத்துக்குவாரான்னு தெரில்லை. அதான்….
ஏன், அன்னிக்கு வேலைக்குப் போறதுன்னா போகட்டும்னு எங்க முன்னாடி சொன்னாரில்ல? இத்தனை நாளா நீ ட்ரை பண்றப்ப கம்முனுதான இருந்தாரு?
அவள் தயக்கம், அவள் ஏதோ மறைக்கிறாள் என்று எனக்குச் சொல்லியது. மென்மையாக அவள் கண்களைப் பார்த்து கூறினேன். என்ன பிரச்சினை மைதிலி? நீ பிரச்சினை என்னான்னு சொன்னாதான் என்னால தீர்வைச் சொல்ல முடியும்!


என் அன்பு அவளை ஆட்டியிருந்தது. இல்ல, நான் பொதுவாவே வேலைக்குப் போறதில் அவருக்கு விருப்பமில்லை. வேலைக்குப் போயிட்டிருந்த என்னை, கல்யாணத்துக்கப்புறம் போகாம நிறுத்துனதே அவர்தான். இவ்ளோ நாள் ட்ரை பண்ணப்ப கம்முனு இருந்தார்ன்னா, எனக்கு எங்க கிடைக்கப் போவுதுங்கிற அலட்சியமா கூட இருக்கலாம்! என் உள் மனசு சொல்லுது, நான் இந்த விஷயத்தைச் சொன்னா, அவரு கண்டிப்பா வேணம்னுதான் சொல்லுவாரு. அதான் பயமாயிருக்கு…

கொஞ்ச நேரம் யோசித்தேன்… சரி நான் ஒரு ஐடியா சொல்றேன்.

என்னுடைய ப்ளான் படி, அன்று மாலையே ப்ரியாவிடம் கேட்டேன். ஏன் ப்ரியா, நீ ப்ரேமையும், அவன் ஒய்ஃபையும் ஒரு தடவை கூட நம்ம வீட்டுக்கு கூப்பிடவே இல்லை? இந்த வீக்கெண்ட் கூப்பிடலாமா?
திடீரென்ற என் கேள்வியில், ஒரு முறை திகைத்தவள் பின் கேட்டாள், என்ன திடீர்ன்னு? நீங்கதானே அவிங்க வீட்டுக்கு போக கூடாதுன்னீங்க? இப்ப என்ன புதுசா? (ஒரு வேளை எனக்கு சந்தேகம் வந்து ஆழம் பார்க்க கேட்கிறேனோ, என்ற பதைபதைப்பில்தான் அப்படி கேட்டாள்!)
நான் ஏமாற்றுகிறேன் என்றாலும், நல்ல விஷயத்திற்காகத்தான் இதைச் செய்கிறேன் என்ற காரணம் எனக்கு தைரியத்தைத் தந்தது. ஆமா, வேணாம்னு சொன்னேன். ஏன் சொன்னேன், நீயும், உன் ஃபிரண்டும், அந்தப் பொண்ணை இன்சல்ட் பண்றது தப்புங்கிறதுனால் சொன்னேன். வீட்டுக்குப் போக வேண்டாம்னு சொன்னவன், நீ அவன் கூட ஃப்ரெண்டா பழகுறதை நிறுத்தச் சொன்னேனா? இல்ல, எப்பியாவுது அவனை பாக்குறப்ப, பேசாமா நானும் முகத்தைத் திருப்பிட்டு போறேனா?
இப்பியும் அவிங்க வீட்டுக்குப் போறதில் எனக்கு விருப்பமில்லை. அதுனாலத்தான் இங்க கூப்பிடுறேன். திரும்பியும் சொல்றேன், இங்க வந்தும் அந்தப் பொண்ணை அசிங்கப்படுத்துனா, உன்னை மட்டுமில்ல, அவனையும் திட்டிருவேன். அது மட்டுமில்ல, அவன் கூட பழகக் கூடாதுன்னும் சொல்லிடுவேன். இது என் வீடு! இங்க யார், எப்பிடி நடத்துக்கனும்னு ஒரு வரைமுறை இருக்கு!
நான் இதையெல்லாம் கொஞ்சம் கோபமாகவே சொல்லியிருந்தேன். என் பதில், அவளுக்கு நிம்மதியைத் தரவே, அந்த சந்தோஷத்தில், ஓகே, இந்த வாரம் கூப்பிடுறேன். நான் அவளை எதுவும் சொல்ல மாட்டேன் ஓகேவா?
அந்த வீகெண்ட் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். மைதிலிக்கு என் வீட்டுக்கு வருவதில் மிகவும் சந்தோஷம். அது, அவளது முகத்தில் தெரிந்தது.
ப்ளான் படி, நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது மைதிலிக்கு ஃபோன் வந்தது. தனியாய் சென்று பேசியவள், பின் மகிழ்ச்சியாய் வந்தவள், எல்லார் முன்னிலையிலும் சொன்னாள். —- கம்பெனியிலிருந்து ஃபோன் என்றும், அவளுக்கு வேலை கிடைத்தது என்றும், ஆஃபர் லெட்டர் செக் பண்ணிட்டு இம்மீடியட்டா ரிப்ளை பண்ணச் சொன்னாங்க என்றும், ஜாயின் பண்ணிக்கிறது நம்ம இஷ்டத்துக்கு பண்றதா இருந்தாலும், அக்சப்டன்ஸ் உடனே வேண்டுமாம், ரிசோர்ஸ் அலகேஷன் ப்ளான் பண்ணனுமாம் என்று சொன்னாள்.
முதலில் ரியாக்ட் செய்தது நானே! வாவ், கங்கிராட்ஸ் மைதிலி! பரவாயில்லியே, போன தடவை உங்க வீட்டுல வேலைக்கு ட்ரை பண்றேன்னு சொன்னீங்க. இப்ப எங்க வீட்ல வேலையே வாங்கிட்டீங்களே?!
அவள் தயக்கமாக ப்ரேமை பார்த்தாள். நீங்க என்னங்க சொல்றீங்க?

[Image: Actress-Sneha-Childhood-pictures-10.jpg]

என் முன்னாடி கேட்டதால், அவனுக்கும் வேறு வழியில்லை. எனக்கு ஓகேதான் என்றான். எதுக்கும், ஈவ்னிங் வீட்டுக்கு போயி ரிப்ளை பண்ணிக்கலாம் என்றான்.


அதுக்கு எதுக்கு ப்ரேம், வீட்டுக்கு போற வரை வெயிட் பண்ணனும்? உங்களுக்கு ஓகேன்னா சொல்லுங்க இங்கியே என் லாப்டாப்ல இருந்தே ரிப்ளை பண்ணலாமே?!


அதுக்கில்லை, இன்னிக்குதான் உங்க வீட்டுக்கு வந்திருக்கோம். கொஞ்ச நேரம் என் ஃப்ரெண்டு கூட பேசிட்டிருக்கலாம்னுதான்…


அதுக்கென்ன, நீங்க உங்க ஃபிரண்டு கூட பேசிட்டிருங்க. நான், மைதிலிக்கு ஹெல்ப் பண்றேன். ஓகேயா? நீங்க வாங்க மைதிலி, என் லாப்டாப் யூஸ் பண்ணிக்கோங்க. ஆஃபர் லெட்டர்ல டவுட்டுன்னா என்னைக் கேளுங்க.
மைதிலியை அழைத்துக் கொண்டு, எனது கெஸ்ட் ரூமுக்குச் சென்றேன். அவர்களிடம் இருந்து தள்ளி வந்ததும், மைதிலி சொன்னாள். ப்ளானிங் மன்னன் நீங்க. இப்புடியே எல்லாத்தையும் கவுத்துருங்க. அவள் சந்தோஷத்தில் என்னிடம் உரிமை எடுத்திருந்தாள்.

You may also like...

3 Responses

  1. Jenish says:

    Pls update the story

  2. Jenish says:

    Super story

  3. Jenish says:

    bro nxt part podunga

Leave a Reply