வெளிநாட்டு காம திரைப்படங்கள் அறிமுகம் | THE HANDMAIDEN (AH-GA-SSI) (2016)

2016 ஆம் ஆண்டு கொரியன் திரைப்படமாக AH-GA-SSI என்ற பெயரில் வெளிவந்தது. இந்தக் கதையானது,.. ஜப்பானிய ஆக்கிரமிப்பு கொரிய பகுதியிலிருந்து வெளிவந்த நாவாலான Fingersmith என்பதை தழுவி எடுக்கப்பட்டது. இணையத்தில் சப் டைட்டிலுடன் கிடைக்கிறது. Park Chan-wook என்பவரின் இயக்கத்தில் வெளிவந்துள்ளது. 

[Image: images.jpg]

கதை மூன்று பகுதிகளாக பயணிக்கும். முதல் பகுதி Kouzuki என்ற பெரிய பணக்கார பிரபுவிடமிருந்து தொடங்குகிறது. அவரிடம் எண்ணற்ற கலைப் பொக்கிசங்கள் இருக்கின்றன. அவற்றை பெரிய தொழிலதிபர்கள், பணக்காரர்களிடம் விற்பது அவருடைய ஹாபி. அதில் உண்மையானதை விற்காமல், போலியை விற்று பெரும் பணம் சம்பாதித்து வைத்திருக்கிறார். அவருக்கு Hideko என்ற சகோதரிப் பெண்ணொருத்தி இருக்கிறாள். வயதில் இளையவளான அவளை திருமணம் செய்து கொள்வது அவருடைய திட்டமாக இருக்கிறது. இதற்கிடையே Count Fujiwara என்ற நாயகன் அவருக்கு அறிமுகம் ஆகிறான். அவனுக்கு தெரிந்த வரையும் கலையை Hideko க்கு கற்று தர ஏற்பாடு செய்கிறார். 

[Image: p9-hadfield-handmaiden-a-20170302-870x580.jpg]

நாயகி Hideko வை காதலிக்க வைத்து, நாயகியின் மாமாவான  Kouzuki  பணத்தினை கைப்பற்ற, Count Fujiwara ஒரு திட்டம் தீட்டம் தீட்டுகிறான். Hideko வுக்கு பணிப்பெண்ணாக தனக்கு தெரிந்த பெண்ணை நியமனம் செய்து Hideko வுக்கு தன் மேல் காதல் வருவதற்கு உதவ அவளுக்கு வேலை தருகிறான். அவள் Sook-hee எனும் பிட்பாக்கெட். பணத்திற்காக இந்த வேலையை செய்ய வருகிறாள்.

Hideko வுக்கு வேலைக்காரியாக பணிசெய்யும் போது, அவளுடைய வெகுளிதனத்தைக் கண்டு Sook-heeக்கு குற்ற உணர்வு வருகிறது. ஒன்னும் தெரியாத தன்னுடைய எஜமானியை ஏமாற்றப் போகிறோமே என்று  வருந்துகிறாள். Hideko, அவளை ஒரு வேலைக்காரியாக கையாளமாள், நல்ல தோழியாக கையாளுகிறாள். இருவருக்கும் இடையே லெஸ்பியன் உறவும் ஏற்படுகிறது. 

Hidekoவை திருமணம் செய்ய வளர்க்கும் பணக்கார மாமா.
Hidekoவை காதலிக்க வைத்து மாமாவின் பணத்தினை அபரிக்க நினைக்கும் நாயகன்.
Hidekoவுடன் லெஸ்பியன் உறவில் இருக்கும் வேலைக்காரி என மூன்று நபர்களில் யாருக்கு Hideko கிடைத்தாள். Hidekoவின் எல்லையற்ற பணம் யாருக்கு சென்றது என்று திரில்லாக செல்லும் கதைகளம்.

எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டது. அதனையெல்லாம் கூறினால் திரைப்படத்தின் சுவாரசியம் கெட்டுவிடும் என்பதால் தவிர்த்திருக்கிறேன். 

[Image: the-handmaiden-sex-scene-korean-film-les...aeri-5.jpg]
[Image: images-2.jpg]
[Image: images-1.jpg]

படத்தினை இணையத்தில் தேடி பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை தாருங்கள் நண்பர்களே. இந்தக் கொரியன் திரைப்படத்தின் லெஸ்பியன் உறவு உருவாகும் காலச்சூழலும், லெஸ்பியன் காட்சிகளும் வக்கிரம் இல்லாமல் கவிதையாக இருக்கும். அதனால் தான் எண்ணற்ற தளங்கள் Erotic பட தர வரிசையில் முதல் இடம் இப்படத்திற்கு தந்திருக்கிறார்கள். இண்டர்நேசுனல் திரைப்பட தரவுதளமான IMDB யில் 8.1 மதிப்பெண் பெற்றிருக்கிறது. 

நன்றி. 

hotking

கண்டிப்பாக .... விரைவில் எதிர்பாருங்கள் ...

You may also like...

Leave a Reply